தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, March 28, 2012

மனோரமா!!


சென்னை, மார்ச் 22- தமிழ்த் திரைப்பட உலகில் பழம்பெரும் நடிகையான மனோரமா சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். ஆனால் தொடர்ந்து தலைவலியினால் அவதிப்பட்டு வந்தார்.

மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைவலிக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளதாக கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பெயர் மனோரமா
தந்தை பெயர் காசி கிளார்க்குடையார்
தாயார் பெயர் ராமாமிர்தம்மாள்
பிறந்த ஆண்டு 1939
பிறந்த ஊர் ராஜமன்னார்குடி
வளர்ந்த ஊர் காரைக்குடி அண்மையில் உள்ள பள்ளத்தூர்
முதன் முதல் நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய ஆண்டு 1952 முதல் நாடகம் 'யார் மகன்?'. நடித்த மொத்த நாடகங்கள் சுமார் 5000க்கும் மேல்.
திரையுலகில் முதல் படம் நடித்த ஆண்டு 1958 முதல் படம் 'மாலையிட்ட மங்கை'. நடித்த மொத்த திரைப்படங்கள் 1200க்கு மேல். உலக சாதனையாளர் பட்டியலில் 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
நடித்த மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்.
தயாரித்த படம் இவர் தயாரித்த 'தூரத்துச் சொந்தம்' படம் இந்தியன் பனோரமா விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இசை நிகழ்ச்சி இவர் தனது மகன் பூபதியுடன் இணைந்த 'மியூசிரமா' என்ற இசைக் குழுவின் மூலம் இந்தியாவிலும் உலகில் பல நாடுகளிலும் பாடி, நடித்து, நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
நடித்துள்ள டி.வி. தொடர்கள் 'காட்டுப்பட்டிச் சத்திரம்', 'அன்புள்ள அம்மா', 'தியாகியின் மகன்', 'வானவில்', 'ஆச்சி இன்டர்நேஷனல்', 'அன்புள்ள சிநேகிதி', 'அல்லி ராஜ்யம்', 'அவள்', 'ரோபோ ராஜா', 'மனுஷி', 'வா வாத்தியாரே', 'டீனா மீனா' போன்ற இன்னும் பல.
நடிப்பில் பெற்ற பரிசுகள் 1. சிறந்த குணச்சித்திர நடிகை, புதிய பாதை படத்தில் நடித்ததிற்காக 1990ல் இந்திய அரசு பரிசு.
2. 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளதைப் பாராட்டி தமிழ் நாடு பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் 'TANSJA' விருது.
3. தெலுங்கு 'Sambayya' படத்தில் சிறப்பாக நடித்ததைப் பாராட்டி 'AFJA' விருது.
4. சிறந்த குணச்சித்திர நடிகையாக அண்ணா விருது, என்.எஸ்.கே. விருது, எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது ஆகியவை தமிழக அரசினால் வழங்கப்பட்டன.
சிறப்பு விருது மற்றும் பட்டங்கள் 1. இந்திய குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ, தமிழ் நாடு அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச் செல்வம், நவரச நாயகி, மக்கள் கலை அரசி, முத்தமிழ் வித்தகி.
2. மலேசிய அரசின் டத்தோ சாமுவேல் 'சரித்திர நாயகி' விருது. (டத்தோ சாமுவேல் சாதனையாளர் விருது).
3. அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. விருது.
4. கேரள கலா சாகர் விருது.
5. பிலிம் ஃபேன்ஸ் விருது 28, சாதனையாளர் விருது.
6. பிலிம் ஃபேர் சாதனையாளர் விருது.
7. சினிமா எக்ஸ்பிரஸ் விருது.
ஐந்து முதல்வர்களுடன் நடித்தது 'அண்ணா', 'கலைஞர்', 'புரட்சித் தலைவர்', 'ஜெயலலிதா', தெலுங்கில் 'என்.டி.ஆர்'.
இந்த சாதனை நாயகியின் சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது!


இப்போது ???????????????????????

No comments:

Post a Comment