தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 மார்ச், 2012

உலகத்தை இணைத்த கிராகம்பெல் !


இன்று உலகத்தின் எந்த மூலைக்கும் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடத்திலும் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணமாக விளங்குவது தொலைபேசி என்ற சாதனம்.
இதற்கு முதலில் அடித்தளம் இட்ட அறிவியல் மேதை, அலெக்சாண்டர் கிரகாம்பெலின் பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கை வரலாறு: கிரகாம்பெல் 1847 மார்ச் 3ம் திகதி ஸ்காட்லாந்து எடின்பர்க்கில் பிறந்தார். இவரது அப்பா சிறந்த எழுத்தாளர். பேச மற்றும் காது கேட்காத மக்களுக்கு கற்பிப்பது தொடர்பான புத்தகங்களை எழுதியவர்.
கிரகாம்பெல், எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 14ம் வயதில் பட்டம் பெற்றார். பின் எல்ஜினில் உள்ள வெஸ்டன் ஹவுஸ் அகாடமி கல்லூரியில் ஒரு ஆண்டு ஆசிரியராக இருந்தார்.
கடந்த 1870ம் ஆண்டில் இவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. அப்போது தொடர்பு இயந்திரங்கள் பற்றி படிக்க தொடங்கினார். முதலில் மின்சாரத்தை பயன்படுத்தி அதிக தூரம் கேட்கும் வகையில் பியானோவை உருவாக்கினார்.
தொலைபேசியை உருவாக்கியது எப்படி: கிரகாம்பெல்லின் கடந்த கால அனுபவம் தான் தொலைபேசி உருவாக்க பயன்பட்டது.
இவர் கடந்த 1874ம் ஆண்டில் இரும்பு மற்றும் காந்தத்தை பயன்படுத்தி ஒரு மின்சுற்றை உருவாக்கி, பின் மின்சாரம் இல்லாமல் காந்தத்தை பயன்படுத்தி ஒலியை அதிர வைத்தார்.
மேலும் இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி நாம் பேசும் ஒலிஅலைகளை, காந்த அலைகளாக மாற்றி, மீண்டும் ஒலியாக மாற்றினார்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைபேசியை உருவாக்கினார். இதற்காக தனி நிறுவனத்தை துவக்கினார்.
நிறுவனத்தின் வரலாறு:
* 1876ல் தொலைபேசி கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார்.
* 1877ல் "பெல் டெலிபோன்' கம்பெனியை உருவாக்கினார்.
* 1879ல் இது பிரிட்டன் தொலைபேசி நிறுவனத்துடன் இணைந்தது.
* 1880ல் அமெரிக்கன் பெல் டெலிபோன் கம்பெனி என மாற்றப்பட்டது.
* 1881 ஜன., 25 தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பெல் இணைந்து ஓரியன்டல் தொலைபேசி கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.
* 1922ல் கனடாவில் உள்ள நோவல் நகரில் கிரகாம்பெல் இறந்தார்.
கண்டுபிடிப்புகள்: கிரகாம்பெல் தனியாக மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்தார்.
தொலைப்பேசி தவிர, தந்தி கருவி, போட்டோபோன், போனோகிராப், செலினியம் செல் போன்றவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.
http://www.manithan.com/view-2012030316687.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக