தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 மார்ச், 2012

நோய் தீர்க்கும் அரும் மருந்தாக அரைக்கீரை


நோய் தீர்க்கும் அரும் மருந்தாக அரைக்கீரை

உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட நாம் உண்ணும் உணவுகளே பிரதான நோய் தடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.

அரைக்கீரையின் பயன்களும் அப்படித்தான்/ நோய் தீர்க்கும் அரும் மருந்தாக உதவுகிறது.

அரைக்கீரை அதிக அளவிலும்/ தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் கீரையுமாகும். அரைக்கீரை இதன் விதை இரண்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இந்த கீரையில் அற்புதம் தரும் பயன்கள் உள்ளன. இதில் வைட்டமின்களும்/ தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. பல்வேறு பக்குவங்களில் இக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். அபார ருசியையும்/பசியையும் உண்டுபண்ணும் இக்கீரை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முக்கிய உணவாகும்.

பிரசவித்த பெண்களுக்கு சீதளம் வராமல் பாதுகாக்கும். உடலுக்கு பலத்தையும், சக்தியையும் கொடுக்கும். கீரையின் சத்துக்கள் பெருமளவில் தாய்ப்பாலில் கலப்பதால, குழந்தையையும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இக்கீரையை மிளகு ரசத்துடன் கலந்து உட்கொண்டால் உடல் நலமடையும். அரைக்கீரையை பழைய புளியுடன் கடைந்து சாப்பிட்டு வந்தால் பித்த சுரம்/ வாய் ருசியற்றுப்போதல், பசி இல்லாத நிலை போன்றவை குணமாகும். அரைக்கீரையுடன் பூண்டு, மிளகு, பெருகாயம் ஆகியவற்றை சோத்து மசியல் , குழம்பு, பொரியல் செய்து சாப்பிட வாதம், வாய்வு தொடாபான உடல் வலிகள் நீக்கி விடும்.

நாள்தோறும் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் எதுவும் ஆகாது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் களுக்கு இந்தக் கீரையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடா வலி, மண்டை பீனிச நரம்பு வலி, ஜன்னி தலை வலி, கன்ன நரம்பு புடைப்பு ஆகியவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். இக்கீரை மலமிளக்கியாகவும் திகழ்கிறது. குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் தீர, உணவாக இக்கீரையை கொடுக்கலாம். அரைக்கீரை விதைகளை இடித்துக் கூழ் போல காய்ச்சி உணவாக உட்கொள்கின்றனா. இக்கீரை விதை யில் தயாரிக்கப்படும் தைலம் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் தலைமுடி மின்னி கருமையாகவும், செழித்து வளரவும் செய்கிறது.

இத்தனை அற்புதங்களை அரைக்கீரை தரும்போது இதனை உணவில் யாரும் சோக்கவா மறப்பார்கள்> எங்க கிளம்பிட்டீகளா அரைக்கீரையை வாங்கவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக