தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 8, 2012

சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்!


சிவகங்கை இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.

ராணி லட்சுமிபாய் வட இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்

அன்னி பெசண்ட் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.



இம்மண்ணில் மனித இனம் தோன்றியது. 
இவ்வினம் வளர பெண்ணினம் வேண்டும். 

மண் வளத்தை நினைப்பவர்கள் 
வன வளத்தை நினைப்பவர்கள்
பெண் வளத்தையும் நினைக்க வேண்டும்.

பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பார்
பெண் ஈன்றால் முகம் சுளிப்பார்
தன் இனத்தை தானே அழிக்க
நினைப்பதுவும் இவ்வினமே!

நதி ஆனாள்,
காற்று ஆனாள்,
மலை ஆனாள்,
தேசம் ஆனாள்,
தெய்வம் ஆனாள்,
ஆனால் அவளுக்கென்று
ஓர் வரம் கேட்க மறந்தாள்.

ஆத்திரக்காரி, அன்புக்காரி,
அதிகாரக்காரி, அமைதிக்காரி
என்று தூற்றிப் போற்றும் இந்த பெண் இனம் இல்லையேல் உலகம் வெறுமையடா!!!
பாட்டியாய்,தாயாய் , மனைவியாய்,
 மகளாய் மருமகளாய் ,காதலியாய் தோழியாய் , போராளியாய் , தலைவியாய்,அடிமையாய் .......வாழும் பெண்ணே நீ வாழ்க .
 இன்று ஆண்வர்க்கம் உங்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால்................................,

1.இனியாவது ஆண்களை காதல் என்ற பெயரில் ஏமாத வேண்டாம்
2.ஆண்கள் உழைப்பில ஓசில வீட்டில இருந்து சாப்பிடதிங்க.
3.உங்களுக்கு விரும்பியத நீங்களே உழைச்சு வாங்கி கொள்ளுங்கள்.
4.வீட்டில ஆண்களை சமைக்க சொல்லியோ உடுப்பு தோய்க்க சொல்லியோ சொல்லாதிங்க.
5.ஆண்களுக்கு எதிரான உங்கள் வன்முறைகளை குறைச்சு கொள்ளுங்கள்.
6.முடிஞ்ச நீங்களே தனிய ஆண்கள் இல்லாமல் வாழ பழகி கொள்ளுங்கள்.






No comments:

Post a Comment