தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 6, 2012

ஸ்டாலின் நினைவு நாள் (5-3-1953.)


புரட்சிகரவரலாற்றில் அவர் மாபெரும் நட்சத்திரம் அப்ப அவதூறுகள் ஏன்?.
போரஸ்ரொய்கா:கிளாஸ்நொகோவின் பின் ஸ்டாலின் மீதான அவதூறு மீண்டும் ஒருமுறை தீவிரமாகியது. மதம் - மதம்சார்ந்த முற்போக்கு சிந்தனை எல்லாம் ஒன்றாகச் சங்கமிதது மாக்சிய மனிதநேயம் ரசியாவில் மலர்ந்து விட்டதாக எஸ்.வி.ராஜதுரை அவர்கள் குதுகாலித்து. ரசியபுரட்சியில் இலக்கியசாட்சியம் என்ற புத்தகத்தை ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகவே தொகுத்து எழுதியிருந்தார். பல முரண்பாட்டைக் கொண்ட இப் புத்தகமானது ஸ்டாலின் மீதான அவதூறு மட்டுமல்ல மார்க்சிய திரிபுமாகும். அண்மைக்காலத்தில் தேசம் நெற்றில் வெளியாகியிருந்த கட்டுரையொன்றில் ரவிசுந்தரலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட வழமையான குற்றச்சாட்டுக்களோடு புதிதாக, பாதிரியார் ஆவதற்கு ஸ்டாலின் கல்வியும் பயிற்சியும் பெற்றார் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இவ்வாறான குற்றச்சாட்டை சுமத்துபவர்கள் லெனின் மனிதநேய ஜனநாயகத்தை கோரி நின்றார். ஆனால் ஸ்டாலின் அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்தினார் எனச் சொல்லத் தயங்குவதில்லை உண்மையில் லெனினின் அடிப்படைக் கருத்தில் இருந்துதான் ஸ்டாலின் நடைமுறைக்குச் செல்கிறார் என ஸ்டாலினிசத்தின் அடிப்படை என்ற நூலில் உல்ப் வோல்ரெர் என்னும் ஜெர்மனிய எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.
மாக்சியத்தின் நடைமுறை என்பது எழுத்து மேசையில் இருந்து எழுந்து வருவதில்லை. அல்லது சடப்பொருட்களைக் கொண்டு வீடொன்றை கட்டி முடிப்பதைப்போல் இலகுவானது அல்ல மனிதனை அவனது பழைய பிடியில் இருந்து, அதாவது அறிவியல் அறியாமையில் இருந்து மீட்பது, அத்தோடு புதிய ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கோரிய நீண்ட பயணமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சியின் முன்பு ஆட்சி செய்த வர்க்கத்தின் சார்பாக செயற்பட்ட அனைவரின் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு முன்னேறவேண்டிய காரியமாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையானது ஸ்டாலின் மீதான அவதூற்றை அன்றைய யதார்த்த நிலைமைகளுடன் ஆராய்கிறது.
கிறிஸ்தவ பள்ளியில் கல்வி
ஸ்டாலின் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை அதனால் அப்பிள்ளையை பெற்றோர் கிறிஸ்துவ பள்ளியில் சேர்க்கின்றனர். ஒரு குழந்தை என்பது எந்தநாட்டிலும் எங்கும் பெற்றோரின் முடிவுகளுக்கு அல்லது குடும்பநிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு. அதற்கு இசைவான கல்விகற்றல் சூழலிலே விடப்படுகிறார்கள் என்பதே யதார்த்தமாகும். ஸ்டாலின் கூட அவ்வாறுதான் கிறிஸ்துவப் பள்ளியில் படிப்பை மேற்கொண்ட விடயமும். அங்கு கல்விகற்கும் போது கிறிஸ்துவத்தில் சொல்லுக்கும் செயலுக்குமான முரண்பாடுகளை காண்கின்றார். அவருக்கு பதினைந்து வயது இரகசிய மார்க்சிய குழுக்களின் தொடர்பு ஏற்படுகிறது. மார்க்சிய நூல்களைப் படிக்கிறார் அது பாலிய விருத்திப்பருவம். துடிப்பு நிறைந்த காலம் அவ்வேளயில் தான் கிறிஸ்துவ நூல்களை எடுத்துச் சென்று மறைத்து வைக்கிறார். அதற்கு பதிலாக மார்க்சிய நூல்களை அவ்விடத்தில் வைக்கிறார்.
இச்செயலுக்காக அவர் தண்டனையைப் பெறுகிறார். அவர் கிறிஸ்தவ பள்ளியில் திறமையான மாணவனாக இருந்தும் முடிவில் மோசமான சான்றிதழ்களையே அவருக்கு பாதிரிகள் வழங்குகின்றனர்.
கிறிஸ்துவம் பற்றிய அவரது பார்வையை 13.12.1931ல் ஜெர்மனிய எழுத்தாளர் எமில் லூட்விக் அவர்களுக்கு அளித்த பேட்டியில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம் .அது இவ்வாறு அமைந்து இருந்தது.
லுட்விக்- கிறிஸ்துவ பாதிரிகளிடம் நல்ல அம்சங்கள் உள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?
ஸ்டாலின்- ஆம் படுமோசமான நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவர்கள் ஒழுங்கும் கடும்போக்கும் கொண்டவர்கள். ஆனால் அவர்களது முதன்மையான முறை உளவறிவது ஒட்டுக்கேட்பது மக்களது ஆன்மாக்களில் புழுவாக துழைத்துச்செல்வது அவர்களது உணர்வுகளை சீண்டுவது அதில் என்ன நல்ல அம்சம் இருக்கலாம்? உதாரணமாக விடுதியில் ஒன்பது மணிக்கு காலைத்தேனீர் மணியடிக்கும்;. நாங்கள் சாப்பாட்டு அறைக்குச் செல்வோம்-மீண்டும் எங்கள் அறைகளுக்கு திரும்பிய போது-எங்களது பெட்டிகள் திறந்து போடப்பட்டிருப்தை அறியமுடிம். இதில் என்ன நல்ல அம்சம் இருக்கமுடியும்.
ஒரு கட்சி சர்வாதிகாரத்தின் பேரில் பல தேசிய இன இணைப்பு.
இவ்விடயம் பற்றி எழுதுவோர் இந்தக் குற்றச்சாட்டை லெனின் உட்பட கம்யூனிசக்கட்சி முழுவதுமே பொறுப்பெடுக்க வேண்டும் என சொல்கிறார்கள் போலும். இதற்கும் ஸ்டாலின் மீது பழியைப் போடாமல் இருந்தது நல்லகாலம்.
ரசியாவின் தேசிய இனங்கள் கம்யூனிச ஆட்சிக்கு முன்னர் எவ்வாறான ஆட்சிமுறை நிலவியது என்பனவற்றில் இருந்துதான் இவ்விடயம் பார்க்கப்படவேண்டும்.
அதாவது அன்றைய ஜார் சாம்ராச்சியத்தின் கீழ் 100 க்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இணைக்கப்பட்டதாகவே அப்போதைய ஆட்சிமுறை இருந்தது. யுத்தவெறிகொண்ட – பிரதேச ஆக்கிரமிப்பும்- அயல்நாடுகள் மீது படையெடுப்பும் எனக் காணப்பட்ட ஜாரின் ரசியாவிலேயே புரட்சிப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மக்கள் ஒன்றாகவே ஜார் சாம்ராச்சியத்தை வீழ்த்தினார்கள். அதன் பின்புதான் சோசலிச சோவியத் கட்டப்படுகிறது.
தேவையற்று எங்கும் எப்போதும்: பிரிவினை கோரிக்கைகள் எழுப்படுவதில்லை ஆனால் இளம் சோவியத்தை தகர்த்துவிட அல்லது கூறுபோட முனைந்த ஜரோப்பிய- அமெரிக்க- யப்பானிய-முதலாளித்துவ கூட்டுக்களும்- எதிர்ப்புரட்சிப் பேர்வழிகளும் அடக்கப்பட்டார்கள் என்பதை தேசியஇன இணைப்புச் சண்டையாக ரவிசுந்தரலிங்கம் பார்க்கிறாரோ?.
அன்று போல்சிவிக்குகள் சோவியத்தை நிறுவியதில் என்ன தவறு இருக்கிறது. ஏனைய தேசிய இனங்கள் மீது ஆக்கிரமிப்புச் செய்து லெனினும் ஸ்டாலினும் இணைத்த மாதிரியல்லவா எழுதிக்கொள்கின்றீர்கள் ஏன் இந்த அவதூறு?
கிட்லரின் பாசிச ஜெர்மனியுடன் ஒப்பந்தம்.
1917 அக்டோபர் புரட்சிக்கு பின் சோவியத் ரசியாவை மையமாக வைத்து. பல்வேறு ஒப்பந்தங்கள் நடந்தேறியுள்ளன. கிட்லருடன் 23-ஆகஸ்ட்; - 1939 இல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மட்டுமல்ல யப்பானுடனும், 1941.4.13-இல் -இராணுவ தாக்குதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதேபோல் இத்தாலி, பிரித்தானியா போன்ற நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன.
லெனின் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது இடம் பெற்ற ஒப்பந்தம் பற்றிய குறிப்பை தருவதும் ஸ்டாலின் மீதான அவதூற்றை போக்குவதற்கு பொருத்தமானது. இவ்வொப்பந்தம் 1918-மார்ச்-3ல் கைச்சாத்தானது. பிரேஸ்த் சமாதான ஒப்பந்தம் எனச் சொல்லப்படுகிறது. இவ்வொப்பந்தமானது நால்வர் கூட்டணி என அழைக்கப்பட்ட (ஜெர்மன்-ஆஸ்திரியா கங்கேரி-பல்கேரியா-துருக்கி) நாடுகளுடன் செயய்யப்பட்டது. குறிப்பாகச் சொல்லப் போனால் உக்கிரைன் சோவியத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜெர்மனி சார்புப் பகுதியாக மாற்றப்பட்டது. இதே ஆண்டு ஆகஸ்ட்டில் மிகமோசமான நிபந்தனையுடன் ஜெர்மனி பிரேஸ்த் ஒப்பந்தத்தில் மேலதிக இணைப்புக்களை திணித்தது. 1918 இல் நடைபெற்ற இவ்வொப்பந்தம் ரசியாவின் புரட்சி வரலாற்றில் கொள்ளைக்கார ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
இவ்வொப்பந்தம் பற்றி லெனின் இவ்வாறு கூறியிருந்தார். இவ்வொப்பந்தமானது, அளவிற்கு மீறிய கடும் சுமையை இருத்துவதாகவும் அத்தோடு அளவிற்கு மீறி நிலையற்றதாகவும் இருந்தாலும் இந்த சமாதானத்தின் விளைவாக ரசிய சோவியத் குடியரசு சிறிது காலத்திற்கு அதன் முயற்சிகளை சோசலிச புரட்சியின் மிகவும் முக்கியமான மிகவும் கடினமான பணியில் தன்னை ஒழுங்கமைத்து ஒருங்கிணைத்து ஈடுபடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது. (லெனின் நூல்திரட்டு-3 பக்கம்.113) இளம் சோவியத் ஆட்சியின் தொண்டைக் குழியை நசுக்கிவிட எல்லா முதலாளித்துவ கூட்டுக்களும் எதிர்ப்புரட்சி பேர்வழிகளும் தமது இறுதி சக்தி எல்லாவற்றையும் பிரயோகித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளை யுத்தத்தில் அகப்பட்டு அழிந்து போவதா அல்லது சமாதான ஒப்பந்தங்களால் தம்மை வலுப்படுத்தி எழுந்து நிற்பதா என்பதை அடிப்படையாக வைத்துத்தான் லெனினோ ஸ்டாலினோ ஒப்பந்தங்களுக்குச் செல்கின்றனர்
இவ்விடத்தில் லெனின் கூறிய கொள்ளைக் கூட்ட உதாரணத்தைப் பார்ப்போம்.
ஆயுதங்கள் கொண்ட கொள்ளைக் கூட்டம் உங்களுடைய காரை வழிமறித்து கொள்வதாய் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பணம்- பாஸ்போர்ட்- கைத்துப்பாக்கி- கார் ஆகியவற்றையும் அவர்களிடம் கொடுத்து விடுறீர்கள். இதற்கு பதில் நீங்கள் கொள்ளை கூட்டத்தினரின் விரும்பத்தகாத சகவாசத்தில் இருந்து விடுபடுகிறீர்கள். இது ஒரு சமசரமே என்பதில் சந்தேகமில்லை, ( பணம்-கார் ஆயுதம் ஆகியவற்றை நான் உனக்கு தருகிறேன் முழுஉடலுடன் போய் சேரும் வாய்ப்பை நீ எனக்குத் தா) ஆனால் இத்தகைய ஒரு சமரசம் கோட்பாட்டு அடிப்படையில் எந்த நியாயமும் இல்லாதது என்றோ (கொள்ளை கூட்டத்தினர் இந்தக் காரையும் துப்பாக்கியையும் மேலும் பலரையும் கொள்ளை அடிப்பதற்காக பயன்படுத்தலாம் என்றாலும்) சமரசம் செய்து கொண்டவரை சித்தசுவாதீனமுடையவர்; என்றோ கொள்ளை கூட்டத்திற்கு உடந்தையாக இருந்தவர் என்றோ எவரும் கூறமாட்டார்கள். ஜெர்மன் ஏகாதிபத்திய கொள்ளைக் கூட்டத்தினருடன் நாங்கள் செய்து கொண்ட சமரசம் இதுபோன்றதொரு சமரசமேயாகும்.( லெனின் நூல்திரட்டு 4-பக்கம் 36 )
லெனின் தலைமையிலான கம்யூனிசக்கட்சி பிரேஸ்த் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்ததை எதிர்த்து எழுந்த விமர்சனங்களுக்கு லெனின் அவர்கள் மேற்படி உதாரணத்தோடு தமது நிலையை தெளிவுபடுத்துகிறார். மேற்கொண்டு ஸ்டாலின் செய்து கொண்ட ஒப்பந்தமும் அன்றைய அடிப்படை நிலைமைகள் எவ்வாறானவை என்பதையும் பார்ப்போம்.
சிலவேளைகளில் அரசியலில் சமரசம் என்பது அத்தியாவசிய செயற்பாடாக அமைந்து விடுகிறது. அது எதிரியோடு கூட்டு வைத்து எதிரி செய்யும் கொடுமைகளையும் சுரண்டலையும் பாதுகாக்கும் கருவியாக தம்மை மாற்றிக்கொள்ளும் மோசமான நடவடிக்கையைச் சார்ந்ததல்ல. ஸ்டாலின் பாசிச ஜெர்மனியுடன் எவ்வாறான அரசியல் கொள்கையை கடைப்பிடித்தார் என்பதே இங்கு முக்கியமானதாகும்.
முதலாவது உலகயுத்தமும் தம்மை பலப்படுத்திய ஏகாதிபத்திய இணைவும்.
முதலாவது உலகயுத்தத்தை நிறுத்தவும் மேற்கொண்டு வெற்றிகொண்ட நாடுகள் மீது தமது பிடியை வலுப்படுத்தவும் புரட்சிகர மக்கள் இயக்கங்களை நசுக்கவும் அமெரிக்க-இங்கிலாந்து- பிரான்சு-ஜப்பான்- இத்தாலி-மற்றும் கூட்டுநாடுகள் ஜெர்மணியும் இணைந்ததான முழு ஏகாதிபத்தியக் கூட்டுக்கள் 1919-யூன்-28ல்-வெர்சேய் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. இவ்நடவடிக்கையை அலட்சியப்படுத்தாமல் கவனத்தில் கொள்ளும் போதுதான் ஸ்டாலின்-கிட்லர் சமாதான ஒப்பந்தம் பற்றிய தேவையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இவ்விடயமாக பாசிச கிட்லருடன் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்தார் என அவதூறு செய்யும் நபர்கள்; சிறிலங்கா மகிந்த அரசும்-புலிகளுக்குமிடையிலான வன்னிச்சண்டையின் போது மீறப்பட்ட ரணில் பிரபாகரன் ஒப்பந்தத்தை வலியுறுத்தி மீளவும் சமாதான ஒப்பந்தம் ஒன்றைக் கோருவதும் அதனூடாக புலிகள் நெருக்கடியில் இருந்து மீளவும் மக்கள் அழிவைத் தவிர்பபதுமான ஆலோசனையை வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் ஸ்டாலின் கிட்லர் உடன் ஒப்பந்தம் செய்து சோவியத் மக்களின் அழிவையும் போல்சிவிக்களின் (ஆட்சியில் இருந்த கம்யூனிசக்கட்சி) அழிவையும் பாதுகாக்கலாம் என முடிவெடுத்தால் அதுதான் உங்களுக்கு பிரச்சனை உங்களது பார்வைக் குறைபாட்டின் அடித்தளம் என்ன’? ஏகாதிபத்தியங்கள் கக்கிய பொய்ப்பிரச்சாரங்களுக்கு அப்பால் செல்லாததா? இந்த ஒப்பந்ததிற்கு சென்றதன் மூலம் போற்றத்தக்க அரசியலை ஸ்டாலின் வென்றெடுத்தார். அதாவது ஒன்றரை வருடங்கள் நீடித்த இவ்வொப்பந்தம். 22 யூன்-1941ல் கிட்லரால் எதிர்பாராதமுகமாக சோவியத் மீது தாக்குதல் செய்து மீறப்படுகிறது. தொடர்ந்த ஆக்கிரமிப்பானது ஸ்டாலின்கிராட் வரை தொடர்ந்தது.
என்றாலும் மக்கள் ஸ்டாலினோடு அணிதிரண்டனர். செம்படையின் புதியவீச்சோடு கிட்லரின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அது மட்டுமல்ல கிழக்கு ஜெர்மனியை ரசியப்படைகள் கைப்பற்றிக் கொண்டதும் வரலாறு. கிழக்கு ஜெர்மனியை ஸ்டாலின் பிடித்தது சோசலிச ஆக்கிரமிப்பு செய்வதற்காக அல்ல. ஜெர்மனிய நாசிகளின் போர் வெறியில் இருந்து இளம் சோவியத்தை பாதுகாக்க போடப்பட்ட வேலிதான். இந்நிலை ஏற்படுவதற்கான காரணகர்தாக்கள் ஜெர்மனிய பாசிச சக்திகள் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இவ்வொப்பந்தத்திற்கு சென்றதன் மூலம் இரண்டுவிதமான அரசியலை ஸ்டாலின் வென்றெடுத்தார்.
1- சர்வதேசிய மட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சமாதானத்தையும் மக்கள் நலனையும் விரும்புகிறவர்கள் என்பதை தெளிவாக்கியது. கிட்லர் போன்ற பிற்போக்குவாதிகளோ எவ்வாறு சொல்லுக்கும் செயலுக்குமான முரண்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியது.
2. சொந்த மக்கள் மத்தியில் கம்ய+னிஸ்ட்டுக்கள் நேர்மையான அரசியல் செயற்பாடுகளை கடைப்பிடிப்போர் என்பதை வெளிப்படுத்தியது. அதனூடக கிட்லரின் மாபெரும் படையெடுப்பில் இருந்து ரசியாவை பாதுகாப்பதற்காக மிக மிக துன்பங்களை சுமந்து மக்கள் ஸ்டாலின் பக்கம் நின்றார்கள் என்பதை வரலாறாக பதிந்தது.
லெனின் இருந்தபோது 1918-மார்ச் -3இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கான பதிலை இக்கட்டுரையில் சேர்ப்பது பொருத்தமானது. (கேள்வியை எழுப்பியது கிளர்ச்சி மற்றும் பிரச்சாரத் துறைகளுக்கான மாநாட்டில் பங்கு பற்றியவர்கள்-14.10.1925 )
கேள்வி- ஜெர்மனியுடனான ஒப்பந்தத்தின் தொடர்பாக ரசியாவிற்கு புதிய நோக்கங்கள் உண்டா?.
பதில்-  இல்லை நமக்கு எப்போதும் ஒரேநோக்கம்தான் இருந்து வந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும். அது ரசியாவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் வெற்றியுமாகும். நமக்கு வேறு நோக்கங்கள் ஏதும் அவசியமில்லை. எந்த ஒப்பந்தங்கள் நிறைவேறினாலும் அவை இதில் எதனையும் மாற்றிவிடாது.(கம்யூனிச முழுவெற்றியையே இங்கு குறிப்பிடுகிறார்)
சோவியத்தை உருவாக்கிய முன்னோடிகளை அழித்தொழித்தது பல்லாயிரக்கணக்கான மக்களையும் கொன்றது.
அன்றைய இளம் சோவியத் ரசியா மிக மோசமான எதிர்ப்புரட்சி ஆயுதப்படைகள், அன்னியத்தலையீடுகள், அன்னியநாடுகளின்; பிராந்திய ஆக்கிரமிப்புக்கள், சதிகள், என்ற அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி இருந்தது. இவ்வேளையில் கட்சியினுள் பிளவையும் மார்க்சிய திரிபுகளையும் தூண்டி பிளவிற்கு வழிகோலும் செயற்பாடுகளும் வளர்ந்து வந்தது.
சோவியத்தை உருவாக்கிய முன்னோடிகள் என்று சொல்லப்படுபவர்களில் ரொஸ்கி, புகாரின் இவர்களை எடுத்துக்கொண்டால் முதலாளித்துவ எழுத்தாளர்களே ரொஸ்கியை இடது எதிர்ப்பாளர் எனவும் புகாரினை வலது எதிர்ப்பாளர் எனவும் அழைத்தனர். அதாவது ரொஸ்கி ஒருவித சரணாகதிப் போக்கையும் லெனினின் கருத்துக்களுக்கு விரோதமான எதிர்க்கருத்துக்களை கொண்டிருந்தார். அத்தோடு புரட்சிகரமாற்றம் சாத்தியம் இல்லை என்ற கருத்தையும் கொண்டிருந்தார். புகாரின் சந்தர்ப்பவாதியாக மாறத்தொடங்கி கடைசியில் வலதுசாரி கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு தலைமை தாங்கினார்.
இவ்வாறுதான் லெனின் தலைமையில் இருக்கும் போதே கூட்டரசைக் கட்டிய முன்னோடிகள் பிரச்சனைகளை உருவாக்கி இருந்தனர். இவைகள் பற்றிய விபரங்களை. நூல்திரட்டு லெனின் பாகம்-3-4ல் பார்க்க முடியும். இவ்வாறான உட்கட்சி நெருக்கடிகள் தோன்றிய போதுதான் லெனின் இறந்து போகிறார்.
இவ்விடத்தில் எதிர்ப்புரட்சியாளர்கள் பற்றி லெனினுடைய கருத்துக்களைப் பார்ப்போம். சுரண்டுவோரது எதிர்ப்பை இரக்கமின்றி நசுக்காமல் முதலாளித்துவத்தை தோற்கடித்து இல்லாதொழித்திட முடியாது. (லெனின் நூல்திரட்டு-3. பக்கம் 156) மேலும் இப்புத்தகத்தில், இசைவான ஒழுங்கமைப்பும் சர்வாதிகாரமும் என்ற தலைப்பின் கீழ் பார்த்தோமெனில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு தண்டனை வழங்கியது லெனின் காலத்திலேயே தொடங்கப்பட்ட காரியம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஸ்டாலினோ லெனினோ வெறுமனே தமது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக அல்ல எதிர்ப்புரட்சியாளர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது ரசியாவில் சோசலிச நிர்மாணத்தை தக்கவைப்பதற்கே ஆகும். ஒப்பீட்டளவில் ஜார் மன்னராட்சி காலத்து உற்பத்தி வீதத்தைவிட சோசலிச பொருளாதாரக் கட்டுமானங்களால் பலமடங்காக உற்பத்தி பெருக்கம் ஏற்பட்டிருந்தது. விலைகள் மிகவும் குறைவாக வந்தடைந்து கொண்டிருந்தன இவை எல்லாவற்றிக்கும் மார்க்சிய அடிப்படையிலான உற்பத்திமுறையே அடிப்படையாக அமைந்திருந்தது. இவ்வேளையில் தான் தமது நலங்கள் பறிபோனதால் ஆத்திரம் கொண்ட எதிர்ப்புரட்சியாளர்கள் எல்லா வழிகளிலும் முதலாளித்துவத்தைக் கொண்டுவர முயன்றார்கள் . இதன் காரணமாகவே அவர்கள் நசுக்கப் படவேண்டும் என்ற நிலை தோன்றுகிறது. இவர்கள் மீதான ஆரம்பகால அணுகுமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை ஆனால் அதற்கு எந்த எதிhப்;புரட்சி கும்பலும் மதிப்பளித்ததாகவோ அந்த நல்ல நோக்கத்தை வரவேற்றதாகவோ இல்லை. மாறாக தப்பித்து அல்லது விடுதலையின் பின் மீண்டும் எதிர் நடவடிக்கைகள் புரிந்தனர். இந்த விளைவுகளுக்கான அடிப்படைகளை அவர்களே தோற்று வித்தனர். இறுதியாக நசுக்கப்பட்டனர்.
இவ்வாறு மிகமோசமான அரசியல் எதிரிகள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் ஜரோப்பிய அமெரிக்க முதலாளித்துவ நாடுகளோ ஸ்டாலின் அப்பாவிகளான மக்களை எல்லாம் கொன்று குவித்ததாக ஊளையிடுகின்றனர். அப்படியெனில் இந்தச் சர்வாதிகாரிகள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஏன் தமக்குள்ளும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரிந்து எத்தனை கோடி மக்களை கொன்று குவித்தனர் என்பதை உலகமறியும். கூட்டரசை அமைத்த முன்னோடிகளை பொறுத்தவரை ஸ்டாலின் அவர்களை படுத்த படுக்கையில் வைத்து கொன்று விடவில்லை சர்வதேச, உள்ளுர் பத்திரிகையாளர்கள் முன்னிலையிலே விசாரிக்கப்படுகின்றனர். இச்சம்பவமானது லெனின் இறந்தபின் 5-6 வருடங்களைத் தாண்டிய விவகாரமாக வந்தடைந்த பின்புதான் இவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். நீதிமன்றமே அதை தீர்மானித்திருந்தது. இதில் பிரதான மாக்சிய லெனிசிய எதிர்ப்பாளர் ரொஸ்கி 1929 ல் நாடுகடத்தப்படுகின்றார். அங்கும் அவர் உறங்கிக்கிடக்கவில்லை எப்போது ஸ்டாலின் வீழ்வார் தான் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்றபடியே செயற்பட்டார்.
இந்த நபர்கள் ஒன்றும் ஆயுதங்களை கையாளாத சாதுக்கள் அல்ல. இவர்களால் போல்சிவிக் மத்தியகுழு உறுப்பினர்கள் சிலர் சுடப்படுகின்றனர். லெனின் சுடப்பட்டதின் சூத்திரதாரிகள் இவர்களாகவும் இருக்கலாம்.
இவ்வாறே அன்றைய நிலைமைகள் இருந்தது. அன்று திக்குமுக்காடிய இளம் சோவியத் அரசு எவ்வழிகள் மூலம் இதை அணுகியிருக்கலாம் என்பதுதான் ஆரோக்கியமான விமர்சனம் ஸ்டாலின் எதிர்ப்பாளர்களே உங்களிடம் வழியிருந்தால் சொல்லுங்கள் உலகம் படித்துக்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவும்.
ஆனால் மார்க்சியத்தில் அசையாத தெளிவுபெற்ற அவர்கள் (லெனின்-ஸ்டாலின்) காட்டியவழியானது. முதலாளித்துவத்தின் மீள்வருகையை தடுத்துநின்றது. அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு மரணஅடி கொடுத்தது. ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் சிலவேளை இவ்வாறு நினைக்கலாம் ஏன் எதிர்ப்புரட்சியாளர்களுடன் சண்டையை தொடர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு கட்சிகட்டும் உரிமையும் வாக்களிக்கும் உரிமையும் வழங்கிவிட்டால் சமாதானம் பேணமுடியும் என இதுதான் ரொஸ்கியின்வழி இன்று எம் கண்முன்னால் அந்தப் பாதையின ;இடிபாடுகள் உங்களுக்கு தெரியவில்லையா? கோர்பச்சேவ் -ஜெல்சின் கும்பலோடு முதலாளித்துவ மீள்வருகையும் வெட்ட வெளிச்சமாகியது. அந்த வழியில் யாருடைய நலன்கள் பேணப்படுகின்றன? முதலாளித்துவ மீள்வருகையை நிலைநாட்டிவிட்ட அந்தக் கும்பல்தான் ரசியாவின் சுகபோக வாழ்விற்குரியவர்களாகிவிட்டனர். அவ்வடியில் வாரிசாக வந்த புட்டினோ மத அடையாளத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பழிவாங்கல், பத்திரிகையாளர் கொலை, மற்றைய தேசிய இனங்களை ஒடுக்குதல் போன்ற கைங்கரியங்களில் ஈடுபடுகின்றார் .
கொச்சைப்படுத்தல் தன்னிச்சைப்படுத்தல் முடிவுரை.
பாட்டாளி வர்க்கசர்வாதிகாரம் என்பதைக் கொச்சைப்படுத்தியது- தன்னிச்சைப்படுத்த்தியது இக்குற்றச்சாட்டில் நியாயங்கள் பொதிந்துள்ளனவா என்பதைப்பார்ப்போம்.
அன்று சோவியத் ரசியாவில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற நடைமுறையின் கீழ் வரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடனடியாக பெருநில தனியுடமையை ஒழித்தது. அத்தோடு பெரிய நிலச்சுவாந்தார்களின் உடமைகள் நட்டஈடுகள் வழங்காமல் பறிக்கப்பட்டன. அக்டோபர் புரட்சியின் சிலமாதங்களில் முதலாளிகளின் உடமைகள் தொழிற்சாலைகள் பங்குநிறுவனங்கள் வங்கிகள் ரயில்வே ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாற்றீடாக அரசாங்க கூட்டுப்பண்ணைகள் தொடங்கப்பட்டன சிறுவிவசாயிகளை ஒன்றிணைத்து பல்வேறு வடிவிலான கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுவது தொடங்கப்பட்டிருந்தது. மொத்தமாக தனியார் வர்த்தகம் என்ற கொள்ளை அகற்றப்பட்டிருந்தது.
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற மக்கள் நலதிட்டங்கள் இவ்வாறுதான் தொடங்கப்பட்டிருந்தன இந்நடவடிக்கைகளை லெனினே அன்று நெறிப்படுத்தி இருந்தார்
இப்போதுதான் கம்ய+னிச எதிர்ப்பை முதலாளிகள் தொடங்கியிருந்தனர். முதலாளி வர்க்கத்தின் மிகப் பலமுள்ள ஆயுதம் கட்சி அதையும் தமது உடமையாக்கிக் கொள்வது அனேகமான நாடுகளில் அது குடும்ப உடமையாக்கப்பட்டே கிடக்கிறது.
இவ்விடயங்கள் நிர்ணயமான முறையில் ஆய்வு செய்யப்பட்டே முதலாளிகளின் கட்சி புதியகட்சி கட்டும் போக்கு எல்லாமே தடைப்படுத்தப்படுகிறது. இது மார்க்சிய லெனினிய தத்துவார்த்த அடிப்படையில்; அதாவது பாட்டாளிவர்க்க சர்வாதிகார வரையறையினுள்தான் நடைபெறுகிறது. இதில் என்ன கொச்சைப்படுத்தலை ஸ்டாலின் செய்தார்?
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை எவ்வாறு கொச்சைப்படுத்தியதாக நீங்கள் கருதுகின்றீர்கள் என்பது புரியவில்லை மதம் பற்றிய விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். சோவியத்தின் புரட்சிக்கு பின்னால் ஜனவரி 1918 இல் தேவாலயத்தில் இருந்து பாடசாலை அரசாங்கம் என்பன விடுபடுகின்றன. லெனின் தலைமையிலான அரசு இதை அறிவிக்கின்றது. ஆனாலும் சட்டப+ர்வமாக்கப்படவில்லை. அப்போது எதிhப்;புக்கள் மத அமைப்புக்களிடமிருந்து கம்ய+னிச எதிர்ப்பாக தோன்றியது.
அதைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலலான அரசு நீண்டகால இடைவெளிக்கு
பிறகு சட்டரீதியாகவே அதை அறிவிக்கிறது. அதாவது பாடசாலை அரசு என்பன மதநிறுவனங்களில் இருந்து துண்டிக்கப்படுகிறது. (1936-இல் இது சட்டமாக்கப்பட்டது) புரட்சியின் பின்னர் இருசகாப்தங்கள் கடந்த பிற்பாடுதான் சோவியத் அரசு இவ்வாறான சட்டத்தை கொண்டு வருகிறது.
அதன் விளைவாக தேவாலயங்களை இடித்து நொறுக்கி விடவில்லை. மதத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டன.
புதிய சந்ததிகள் மீளவும் பிற்போக்குகளில் உறைந்து விடக்கூடாது. ஒரு அறிவியல் மிக்க நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கருத்தில் தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்விடயங்கள் எல்லாம் கொச்சைப்படுத்தல் அல்ல, மார்க்சிய மூலங்களில் இருந்து உருவாகிய கருத்தின் நடைமுறைகளேயயாகும்.
உங்களைப்போல எழுத்தாளர்கள் ஜரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் கக்கிய விசமங்களை நேர்மையான பார்வையுடன் பரிசீலிக்கவில்லை அதற்கு மேல் எந்த தேடலையும் மேற்கொள்ளவில்லை. புளிச்சல் ஏவறைகாரர்கள் எந்த உணவையும் பசியோடு புசிப்பதில்லைதானே.
ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள். 1924-ம் ஆண்டில் தனது 54 வது வயதில் லெனின் இறந்து போகிறார். அவர் இறக்காமல் இருந்திருந்தால் ஸ்டாலின் மீதான அவதூறுகளாக அல்லாமல் தலைமை பொறுப்பில் கம்ய+னிச வழிநடத்லை செய்து கொண்டிருந்த லெனின் மீதே அவதூறு சுமத்தப்பட்டிருக்கும். அவர் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பார் என்பதை எவரும் மறுதலிக்கமுடியாது. தனது காலடியில் விழாத நாடு;கள் மீது அமெரிக்க-ஜரோப்பிய நாடுகள் புனைந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர் நடவடிக்கைகளையும் நாம் வரலாற்றறில் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலாளித்துவம் மென்மேலும் அவ்வாறே செயற்படும் என்பதுதான் தெளிவான உண்மையாகும்.
திலக்
ஆதார நூல்கள்
1-நூல்திரட்டு பாகம் 3-4 (லெனின்)தமிழ்.
2-ஸ்டாலின் பேட்டிகள் தமிழ்
3- sowietunion die welt mächte  (  karl –heinz- rufman.) Im20.jahr hundert (டொச்)
4- The rise and fall of Stalin (Robert Payne)டொச்சில் மொழிபெயர்கப்பட்டது.
5-grundlagen  des stalinsmus-(ulf wolter)டொச்

No comments:

Post a Comment